தமிழ்நாடு

இளம் பெண் கத்தியால் குத்தி கொலை.. சித்தப்பாவை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?

இளம் பெண்ணை அவரது சொந்த சித்தப்பாவே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் கத்தியால் குத்தி கொலை.. சித்தப்பாவை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரது சகோதரி சரஸ்வதி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் இருவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாயகி குடும்பத்தார், சரஸ்வதி குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சரஸ்வதியின் கணவர் பாலச்சந்தர், லோகநாயகியின் மகள் சிவரஞ்சனியை குத்தியால் 7 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லோகநாயகி மற்றும் அவரது குடும்பத்தினர் சிவரஞ்சனியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இளம் பெண் கத்தியால் குத்தி கொலை.. சித்தப்பாவை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். சிவரஞ்சனியை குத்தி கொலை செய்த பாலசந்தர் என்பவர் அவரின் சொந்த சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories