தமிழ்நாடு

சென்னையில் வரலாறு காணாத பலத்த மழை : நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை மாநகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து வரலாறு காணாத பலத்த மழை கொட்டியது. இதனால், சாலையிலும் மழைநீர் ஆறாக ஓடியது.

சென்னையில் வரலாறு காணாத பலத்த மழை : நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மாநகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து வரலாறு காணாத பலத்த மழை கொட்டியது. இதனால், சாலையிலும் மழைநீர் ஆறாக ஓடியது. உடனடியாக நீரை அகற்றும் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தர விட்ட தைத் தொடர்ந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ரிப்பன் மாளிகைக்கு நேரில் சென்று மழை நீரை அகற்றும் பணிகளை விரைந்து நடக்க முடுக்கி விட்டதுடன், சென்னைரிப்பன் மாளிகை,பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், கன மழையால் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.

இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை யர் ககன்தீப் சிங் பேடி,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories