தமிழ்நாடு

நேற்று போல் இன்றும் கொட்டித் தீர்க்குமா மழை..? - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று போல் இன்றும் கொட்டித் தீர்க்குமா மழை..? - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் நேற்று திடீரென தொடங்கி 10 மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித் தீர்த்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை வருமாறு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.

கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, சென்னை, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் மிதமான முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories