தமிழ்நாடு

“மூணும் பெண் குழந்தை.. வளர்க்க முடியல” : பெண் சிசுக்கொலை செய்த பெற்றோர் கைது - மதுரை எஸ்.பி எச்சரிக்கை!

சேடபட்டி பெண் சிசுக் கொலையில் ஈடுபட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டடனர்.

“மூணும் பெண் குழந்தை.. வளர்க்க முடியல” : பெண் சிசுக்கொலை செய்த பெற்றோர் கைது - மதுரை எஸ்.பி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகேயுள்ள பெரிய கட்டளையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மூன்றாவது மகள் பிறந்த ஆறு நாட்களுக்குள்ளேயே இறந்து போனது சம்பந்தமாக சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தடய அறிவியல் மருத்துவத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பிணக் கூராய்வு செய்ததில் சிசுவின் தலையின் மீது ஏற்பட்ட காயத்தினால் சிசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா ஆகியோரை சேடபட்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில் தங்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தங்களால் சரியாக வளர்க்க முடியாத காரணத்தினால் பெண் குழந்தையின் தலையை சுவற்றில் மோத வைத்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இதுபோன்று பெண்சிசுக் கொலை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்றும், பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள் அரசு காப்பகத்தில் வைத்து வளர்த்துக் கொள்ளலாம் என்றும், பெண் சிசுவை பாதுகாப்பது நம் கடமை என்றும் இதுபோன்று இனி ஒரு பெண் சிசுக்கொலை மதுரை மாவட்டத்தில் நிகழ வேண்டாம் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories