தமிழ்நாடு

வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா சேவியர் பிரிட்டோ? - வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜய்யின் மாமா!

செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா சேவியர் பிரிட்டோ? - வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜய்யின் மாமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாஸ்டர் பட தயாரிப்பாளரும் மற்றும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சீன நிறுவனமான ஷாவ்மி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா சேவியர் பிரிட்டோ? - வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜய்யின் மாமா!

பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் (logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் அடையாறில் உள்ள அவரது இல்லம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள கேரி இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ், பாரிமுனை ஏற்றுமதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன செல்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ததில் அதிகளவிலான வருமானத்தை பிரிட்டோவின் நிறுவனம் மறைத்திருப்பதாகவும் அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பதன் காரணமாகவே சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories