தமிழ்நாடு

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார்; அவருக்கு வயது 80!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார்; அவருக்கு வயது 80!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் கலைஞரிடம் சுமார் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். கலைஞரின் கண் அசைவிற்கு ஏற்ப, அவரது எண்ணங்களை உள்வாங்கி செயலாற்றியவர். கலைஞரின் நிழலாகவே செயல்பட்டவர் அவர்.

தமிழ்நாட்டு காவல்துறையில் சுருக்கெழுத்து நிரூபராக பணியாற்றிய சண்முகநாதன், 1969ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போது அவரது கருத்துகளை எழுத்து மூலம் வெளியிட்டவர் சண்முகநாதன்.

தற்போது சண்முகநாதனின் மறைவு தி.மு.கவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories