தமிழ்நாடு

கணவனை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்; நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? அரும்பாக்கத்தில் பரபரப்பு!

கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலிஸா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்; நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? அரும்பாக்கத்தில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (40). இவருக்கும் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன் தினம் இரவு ஆனந்த குமாருக்கும் அவரின் மனைவி தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனலட்சுமியை கையில் ரத்தக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தகவல் அறிந்த அரும்பாக்கம் போலிஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நேற்று (டிச,.19) காலை அரும்பாக்கம் போலிஸார் தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு பூட்டு மாட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது. சந்தேகமடைந்த போலிஸார் பூட்டை உடைத்து பார்த்த போது ஆனந்த குமார் சிமெண்ட் சீட்டுக்கு கீழே இருக்கும் பைப்பில் கேபிள் டிவி ஒயரால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். தலையில் ரத்தம் காயம் இருந்தது.

இதையடுத்து வீட்டிற்கு தடயவியல் துறையினர் வந்து தடயங்களை சேகரித்தனர். அரும்பாக்கம் போலிஸார் ஆனந்தகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் ஆனந்த குமாரை தான் கொலை செய்ததாக மனைவி தனலட்சுமி ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories