தமிழ்நாடு

“அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை இனியும் வேடிக்கை பார்க்கமாட்டோம்”: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை!

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை இனியும் வேடிக்கை பார்க்கமாட்டோம்”: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினால் அ.தி.மு.கவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஸ்ட்ரீட் ஆர்ட் வரையும் நிகழ்வினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலைகளை சீர்செய்ய முதல் கட்டமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகள் கொடுத்தோம். அவற்றில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். ஆறு மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மிகப்பெரிய சாதனை. மீதமுள்ள வாக்குறுதிகளையும் முதல்வர் படிப்படியாக நிறைவேற்றுவார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் அரசியல் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மீறி நடத்துபவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன.

இதையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.கவினர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தங்கள் கையிலிருந்த ஆட்சி அதிகாரம் பறிபோய்விட்ட விரக்தியில் பேசப்பட்ட கருத்துகள் அவை.

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது சரியல்ல, வார்த்தைகளைக் கவனித்துப் பேச வேண்டும். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories