தமிழ்நாடு

“ஆய்வின் போது மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுத்த ஆட்சியர்” : அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது பள்ளி பாடம் எடுத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

“ஆய்வின் போது மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுத்த ஆட்சியர்” : அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்கச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது, 5 மற்றும் 6ம் வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சற்றும் எதிர்பார்க்காமல் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் எடுத்தார்.

மேலும் இலக்கணம் குறித்த கேள்விகளையும் மாணவர்களிடம் கேட்டார். அப்போது விடை தெரியாத மாணவர்களுக்கு எப்படி அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எளிமையாக மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

ஆசிரியராக மாறி பாடம் எடுத்த மாணவர்களிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories