தமிழ்நாடு

“போதையில் சில்மிஷம்.. தட்டி கேட்ட தந்தை, மகளை வெட்டிய 3 பேர் கைது” : சிறப்பு கவனிப்பு செய்த போலிஸ் !

குன்றத்தூரில் தந்தை, மகளை கத்தியால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“போதையில் சில்மிஷம்.. தட்டி கேட்ட தந்தை, மகளை வெட்டிய 3 பேர் கைது” : சிறப்பு கவனிப்பு செய்த போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூசன் முடித்த தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற போது, குன்றத்தூர் அருகே தந்தையின் எதிரே மகளை கேளி செய்த நபர்களை ரஜினிகாந்த் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த கும்பல், ஆத்திரத்தில், இருசக்கர வாகனத்தை விரட்டி சென்ற மர்ம நபர்கள் தந்தை, மகள் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனையடுத்து குன்றத்தூர் போலிஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் குன்றத்தூர் போலிஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினுராஜ் (22), குன்றத்தூர் எருமையூரைச் சேர்ந்த பரத் (24), ராஜசேகரன் (30), என்பது தெரியவந்தது.

மேலும் போதையில் வந்த இவர்கள் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை தந்தை தட்டி கேட்ட ஆத்திரத்தில் தந்தை, மகள் இருவரையும் வெட்டிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி போன்றவற்றை குன்றத்தூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories