தமிழ்நாடு

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி IIT மாணவி.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணியான ஐஐடி மாணவி உயிரிழந்தார்.

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி IIT மாணவி.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாவித்திரி (21). இவர்களது மகள் கிண்டியில் உள்ள IIT கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், அந்த மாணவி செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் கடந்த 13ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியிலிருந்து திடீரென கீழே குதித்துள்ளார்.

அப்போது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவி அனுமதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories