தமிழ்நாடு

தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் எம்.பி.. கூட்டம்கூட்டமாக கழகத்தில் இணையும் மாற்றுக்கட்சியினர்!

முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை அ.தி.மு.க. Ex.M.P., பா.ம.க. மாநில அமைப்பு துணை தலைவர், த.மா.கா. மாநிலச் செயலாளர் - மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.கழகத்தில் இணைந்தார்கள்.

தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க  முன்னாள் எம்.பி.. கூட்டம்கூட்டமாக கழகத்தில் இணையும் மாற்றுக்கட்சியினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

'கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை அ.தி.மு.க. Ex.M.P., பா.ம.க. மாநில அமைப்பு துணை தலைவர், த.மா.கா. மாநிலச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள்'

முழு விவரம்:

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று (14.12.2021) மாலை, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் ஏ.பி.நாகராஜ், Ex.M.P., தலைமையில், மணிகாரம்பாளையம் பகுதி துணைச் செயலாளர் ஆர்.மணிவேல் - கூட்டுறவு சங்கத் தலைவர் அ. அருண்குணாளன் - மாவட்ட பாசறை பகுதிச் செயலாளர் எஸ்.மனோஜ்குமார் - மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சிங்கை பார்த்திபன் மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த சிங்காநல்லூர் பகுதிச் செயலாளர் ஜே.எஸ்.ஆர்.ஜெயபால், சி.ராஜ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது அமைச்சரும் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளருமான வி.செந்தில்பாலாஜி, கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று (14.12.2021) மாலை, சென்னை மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.கந்தசாமி தலைமையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களும் - அ.ம.மு.க.வைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் கே.சி.விஜய் தலைமையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும் - தென்சென்னை மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் ஏ.ஜி.ரமேஷ் தலைமையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும் - த.மா.கா.வைச் சேர்ந்த மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் எஸ்.ராம்குமார் தலைமையில் த.மா.கா. நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களும் - த.மா.கா. மாநிலச் செயலாளர் திருமதி ஏ.அனுராதா அபி தலைமையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மாவட்டப் பொருளாளர் ஐ.கென்னடி, ஆயிரம்விளக்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், எம்.எல்.ஏ., அண்ணாநகர் பகுதிச் செயலாளர் நா.இராமலிங்கம், ஆயிரம்விளக்கு கிழக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அன்புதுரை, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதிச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தவர்கள் விவரம்

கந்தசாமி, அ.தி.மு.க மாவட்டஇணைசெயலாளர் அம்மா பேரவை தலைமையில்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் (அமமுக)

1) டி.கந்தசாமி அ.தி.மு.க. மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்

2) செந்தில், தென்சென்னைவடக்குமாவட்டம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்

3) மகாராஜன், அம்மாபேரவை, தென்சென்னைவடக்குமாவட்டதலைவர்

4) R. மந்திரமூர்த்தி, துணைசெயலாளர், தென்சென்னைவடக்குமாவட்டஇளைஞர்அணி

5) கண்ணன், தென்சென்னைதெற்குபகுதிஇணைசெயலாளர்

6) R. சிவசுப்பிரமணியன், முன்னாள்அமைப்புசாராமாவட்டதுணைசெயலாளர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் K.C. விஜய் தலைமையில் (அம்மாமக்கள்முன்னேற்றக்கழகம்)

1) K.C. விஜய், மாநிலசெயலாளர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை

2) டைகர் R. தயாநிதி, முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் மீனவர் பிரிவு, தென்சென்னை வடக்கு,

3) M.K. பூங்குன்றன், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர், மத்திய சென்னை கிழக்கு

4) P. ராஜேஷ், 120வது கிழக்குவட்டகழகச்செயலாளர்

5) G. சதிஷ்குமார், 116வது மேற்குவட்டகழகச்செயலாளர்

6) A. தாஹர்அலி, 115வது மேற்குவட்டகழகச்செயலாளர்

7) T. விஜயபாஸ்கர், மத்தியசென்னைகிழக்குமாவட்டஇணைச்செயலாளர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர்

A.G.ரமேஷ் தலைமையில் (அமமுக)

1) A.G.ரமேஷ், தென்சென்னை மாவட்ட ஜெ.பேரவைசெயலாளர்

2) R. பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைசெயலாளர்

3) G.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டஎம்.ஜி.ஆர்.மன்றசெயலாளர்

4) R.K. அஷ்வத், மாவட்டமாணவர்அணிஅமைப்பாளர்

5) F.S.பத்மநாபன், மாவட்ட வர்த்தக அணி இணைசெயலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்

அண்ணாநகர் S. ராம்குமார் தலைமையில் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1) அண்ணாநகர்திருS.ராம்குமார், தலைவர், மத்திய சென்னை மேற்கு மாவட்டம்

2) M.S. வாசுதேசன், பொருளாளர், மத்தியசென்னைமாவட்டம்

3) MMDA ஆ,.கார்த்திக், இளைஞர்அணிதலைவர், சென்னைமேற்குமாவட்டம்

4) விருகை M.M.S. முத்து (எ) S. முத்துலிங்கம், தலைவர், இளைஞர்அணி, தென்சென்னைமேற்குமாவட்டம்

5) G. ராமு, அண்ணாநகர்பகுதிதலைவர்

6) திருசுரேஷ்புஜ்ஜி, தலைவர், வழக்கறிஞர்அணி

7) ஜெகதீசன், மாணவர்அணி, மாநிலசெயலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்

திருமதி A. அனுராதாஅபி தலைமையில் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1) திருமதி A. அனுராதாஅபி, மாநிலசெயலலாளர், தமிழ்மாநிலகாங்கிரஸ்

2) அரும்பாக்கம் அபி, சிறுபான்மைபிரிவு, மாநில பொதுச்செயலாளர்

3) B. சதீஷ்குமார், வர்த்தகர்அணி, மத்தியசென்னைமேற்குமாவட்டதலைவர்

4) S.V.சாம்டேனியல், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்

5) ரூசுஃப்கிறிஸ்டோ, இளைஞர்அணி, மாவட்டசெயலாளர்

6) திருமதி உமா மகேஷ்வரி, இளம்பெண்கள் அணி, மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று (14.12.2021) மாலை, நாகை வடக்கு மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், பா.ம.க.வைச் சேர்ந்த மாநில அமைப்பு துணைத் தலைவர் எம்.ஆர்.ஜே.முத்துகுமார், தலைமையில், பா.ம.க.வைச் சேர்ந்த தரங்கம்பாடி பேரூர்ச் செயலாளர் பி.எம்.ராம்குமார் - மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் பி.பாலமுருகன் - விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.துரையரசன் - ஒன்றிய தலைவர் (எஸ்ஐஎஸ்) ஆர்.செல்வமுத்து - ஒன்றிய தலைவர் (பா.ம.க) டி.சிவமணி - துணைத் தலைவர் எஸ்.செந்தில் - கிளைச் செயலாளர் எம்.சதீஷ் - நகர தொழிற்சங்க தலைவர் எஸ்.மணிகண்டன் - நகர இளைஞர் அணி ப.மணிகண்டன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது நாகை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நிவேதா முருகன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றியச் செயலாளர்கள் அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று (14.12.2021) மாலை, கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், த.மா.காவைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கே.வி. ஜுட்தேவ் தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது அமைச்சரும் - கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான த. மனோ தங்கராஜ், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories