தமிழ்நாடு

ரூ.62 ஆயிரம் பணத்திற்காக பெற்ற மகன்களை கொத்தடிமைகளாக விற்ற தந்தை... அதிரடியாக மீட்ட கோட்டாட்சியர்!

ரூ.62 ஆயிரத்திற்காக ஆடு மேய்க்க விற்கப்பட்ட 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ரூ.62 ஆயிரம் பணத்திற்காக பெற்ற மகன்களை கொத்தடிமைகளாக விற்ற தந்தை... அதிரடியாக மீட்ட கோட்டாட்சியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதிக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜனுக்கு கோவிந்தராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து அவரிடம் தனது நான்கு மகன்களையும் ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக விற்றுள்ளார் சுந்தர் ராஜன்.

இதற்காக ரூ. 62 ஆயிரம் பணத்தை கோவிந்தராஜிடம் இருந்து சுந்தர்ராஜன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் தினமும் ஆடு மேய்த்து வந்துள்ளனர். இதன்படி தஞ்சை மன்னார்குடி சாலையில் சிறுவர்கள் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஒருவர் ‘1098’ சைல்டு ஹெல்ப் லைனிற்கு தகவல் தொடுத்துள்ளார்.

பிறகு அவர்கள் அங்கு வந்து விசாரணை செய்ததில், ஆடு மேய்ப்பதற்காகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து கோட்டாட்சியர் ரஞ்சித் சிறுவர்களை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சிறுவர்களை ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து சுந்தர்ராஜனிடமும், கோவிந்தராஜிடமும் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

banner

Related Stories

Related Stories