தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் புதிய Rights திட்டம் : சிறப்பம்சங்கள் என்னென்ன?

அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் பயன்களை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்கிறது இந்த RIGHTS திட்டம்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் புதிய Rights திட்டம் : சிறப்பம்சங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரூ.1702 கோடியில் உலகிலேயே மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் முன்மாதிரி RIGHTS திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியது அரசு

அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் பயன்களை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்கிறது இந்த RIGHTS திட்டம்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முன்மாதிரி திட்டத்திற்கு பணியிடங்களை நிரப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

மாவட்ட அளவிலான பணியிடங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஊக்குவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள், தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலை வாய்ப்பு ஆகியவை சென்றடைவதை உறுதி செய்தல் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

banner

Related Stories

Related Stories