தமிழ்நாடு

போலி ஆவணம் மூலம் பூர்வீக சொத்தை அபேஸ் செய்த கில்லாடி கும்பல்; போலிஸை நாடிய தி.நகர் டாக்டர்; நடந்தது என்ன?

சென்னை தியாகராய நகரில் ரூ.5 கோடி மதிப்புள்ள சுமார் 2,231 சதுரடி கொண்ட வணிக வளாகத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் பெண் கைது.

போலி ஆவணம் மூலம் பூர்வீக சொத்தை அபேஸ் செய்த கில்லாடி கும்பல்; போலிஸை நாடிய தி.நகர் டாக்டர்; நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தியாகராய நகர், வெங்கட நாராயணன் தெருவில் வசித்து வரும் டாக்டர் ஆர்.ரமேஷ் (59) என்பவரின் பூர்வீக குடும்ப சொத்தான, சென்னை தி.நகரில் உள்ள சுமார் 2231 சதுரடி கொண்ட வணிக வளாகத்தினை கடந்த 2005ம் ஆண்டு போலி உயில் ஆவணத்தினை பயன்படுத்தி சிலர் நில அபகரிப்பு செய்ததாக காவல் ஆணையரிடம் அளித்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் புகார்தாரரின் தாத்தா சுப்பையா கடந்த 1946ம் ஆண்டு கிரையம் பெற்ற சொத்தினை, போலியான உயில் ஆவணத்தை தயாரித்து அதன் மூலம் கடந்த 2005ம் ஆண்டு லஷ்மி என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்துள்ளதும், அதனை தொடர்ந்து அவரது கணவர் மனோகரன் என்பவருக்கு செட்டில்மென்ட் செய்துள்ளதும், பின் சண்முகசுந்தரம் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளதும், அதனை பயன்படுத்தி விக்னேஷ் என்பவருக்கு விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

எனவே, நில மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்திட மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் சீரிய முயற்சியால் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி செய்த சென்னை கோடம்பாக்கத்தினை சேர்ந்த லஷ்மியின் கணவர் மனோகரன், சண்முகசுந்தரம் மற்றும் விக்னேஷ் ஆகியோரை அடையாளம் கண்டு தனிப்படையினர் விசாரணை செய்து லஷ்மியை (51) கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories