தமிழ்நாடு

நாய் கடித்ததால் மயங்கிய குரங்கு; தனது மூச்சுக்காற்றை செலுத்தி காப்பாற்றிய ஓட்டுநர்: நெகிழ்ச்சி சம்பவம்

குரங்குக்கு மூச்சுக்காற்றை செலுத்தி உயிரைக் காப்பாற்றிய கார் ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாய் கடித்ததால் மயங்கிய குரங்கு; தனது மூச்சுக்காற்றை செலுத்தி  காப்பாற்றிய ஓட்டுநர்: நெகிழ்ச்சி சம்பவம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி குரங்கு ஒன்றைத் தெரு நாய்கள் துரத்திக் கடித்துள்ளது.

இதில் அந்த குரங்கிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பிரபு குரங்குக்கு தண்ணீர் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது குரங்கு தண்ணீர் குடிக்காமலிருந்தது.

உடனே பிரபு தாமதிக்காமல் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு துள்ளி எழுந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குரங்கை வனத்துறையிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில் உயிருக்குப் போராடிய குரங்கிற்கு முதலுதவி செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து கார் ஓட்டுநர் பிரபுவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories