தமிழ்நாடு

"'மாநிலக் கல்விக் கொள்கை' - விரைவில் உருவாக்கப்படும்": அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?

விரைவில் மாநிலக் கல்விக் கொள்ளை உருவாக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

"'மாநிலக் கல்விக் கொள்கை' - விரைவில் உருவாக்கப்படும்": அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில், பள்ளி மாணவிகளுக்குக் கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்குக் கணினிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"அரசுப் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் கணினி வழங்குவதும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின் படி மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கும் திட்டம் உள்ளது. கடந்த வாரம் இது தொடர்பாக அதிகாரிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இறுதி அறிக்கை வரும். பிறகு விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நமது நிலைப்பாடு தெரியும்.3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானது அல்ல" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories