தமிழ்நாடு

அடுத்த 10 ஆண்டில் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும்: அமைச்சர் பி.மூர்த்தி நம்பிக்கை!

அடுத்த 10 ஆண்டில் விவசாயம் லாபமான தொழிலாக இருக்கும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டில் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும்: அமைச்சர் பி.மூர்த்தி நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று உலக மண்வள தினம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டார்.

விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்,"தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி வேவைக்கு அதிகமாகவே உள்ளது. இறக்கை உரங்களால் மண் வளமாகவும், வசமாகவும் இருந்தது. ஆனால் இப்போது மண் அந்தளவிற்குச் சத்துடன் இல்லை.

மண்புழுவைக் கூட உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளோம். இறக்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். அடுத்த பத்தாண்டில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.

100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories