தமிழ்நாடு

“உதயநிதி அமைச்சராக வேண்டும்.. இது என் விருப்பம் மட்டுமல்ல.. மக்களின் விருப்பம்” : அமைச்சர் அன்பில் மகேஸ்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“உதயநிதி அமைச்சராக வேண்டும்.. இது என் விருப்பம் மட்டுமல்ல.. மக்களின் விருப்பம்” : அமைச்சர் அன்பில் மகேஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.

வட்டச் செயலாளர் தமீம் அன்சாரி ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று,10 பேருக்கு தையல் எந்திரம், இஸ்திரி தொழிலாளர்கள் 7 பேருக்கு இஸதிரி பெட்டி, மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி மற்றும் அரிசி, ஸ்கூல் பேக், புத்தாடைகள் என 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , “சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் பம்பரமாகச் சுழல்கிறார். தொகுதிக்காக ஏன் இவ்வளவு உழைக்கிறீர்கள் என கேட்டதற்கு, 7 நாட்கள்தான் எனக்காக நான் வாக்கு சேகரித்தேன். ஆனால் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தனர். அதனால் அவர்களுக்கு தான் நன்றி கடன்பட்டுள்ளதாக உதயநிதி கூறினார்.

மற்ற 233 தொகுதிளில் உள்ள மக்களும் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள மக்களைப் பார்த்து பொறாமைப் படுகின்றனர். அந்தளவுக்கு உதயநிதி இந்த தொகுதிக்கு பணியாற்றி வருகிறார். ஒரு தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுமைக்கும் பணியாற்றுபவராக விரைவில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அவருடைய பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

234 தொகுதிகளும் பயன்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மாறவேண்டும் என்று மேடையில் பேசினீர்கள் அவர் எப்படி மாறவேண்டும் என நினைக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் நினைப்பது, எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்யும்போது, அவர் உயரிய பதவிக்கு சென்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயனளிக்கும் என்ற எண்ணம் உள்ளது. உதயநிதி அடுத்தகட்டமாக அமைச்சராக வேண்டும்” என பதில் அளித்தார்.

banner

Related Stories

Related Stories