தமிழ்நாடு

மா்மமான முறையில் இறந்து கிடந்த பயணி.. ஏா் இந்தியா விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் - நடந்தது என்ன?

மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மா்மமான முறையில் இறந்து கிடந்த பயணி.. ஏா் இந்தியா விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து மதுரை செல்லவேண்டிய ஏா் இந்தியா விமானம் இன்று பிற்பகல் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கினைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் இருந்தனா்.

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. சென்னை பயணிகள் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் தரையிறங்கினா். ஆனால் ஒரு பயணி மட்டும் விமானத்திலிருந்து இறங்கவில்லை. இதையடுத்து ஏா் இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி பாா்த்தபோது, மதுரையை சோ்ந்த சண்முக சுந்தரம் (72) என்ற பயணி மட்டும் அவருடைய இருக்கையில் சாய்ந்து தூங்குவதுபோல் இருந்தாா். ஊழியா்கள் எழுப்பியபோது, சுயநினைவு இல்லாமல் இருந்தாா்.

இதையடுத்து விமானநிலைய மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி, பரிசோதித்தபோது, அவா் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சென்னை விமான நிலைய போலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலிஸார் விரைந்து வந்து உடலை விமானத்திலிருந்து கீழே இறக்கி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதோடு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

இதற்கிடையே இந்த விமானம் இன்று மாலை 3 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 115 போ் பயணிக்க இருந்தனா். ஆனால் பயணி ஒருவா் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்துவிட்டதால், விமானத்தை மும்பைக்கு இயக்க விமானி மறுத்துவிட்டாா்.

இதையடுத்து விமானம் முழுமையாக கிருமிநாசினி மருந்து அடித்து சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்பு 115 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனா். விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்று பரபரப்பு நிலவியது.

banner

Related Stories

Related Stories