தமிழ்நாடு

நாளையும் மிககனமழை எச்சரிக்கை... 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் மிககனமழை எச்சரிக்கை... 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் மழையின் தீவிரத்தைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories