தமிழ்நாடு

பணியின்போது சிறப்பு SI வெட்டிப்படுகொலை: முதல்வர் இரங்கல் - குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி அறிவிப்பு!

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பணியின்போது சிறப்பு SI வெட்டிப்படுகொலை: முதல்வர் இரங்கல் - குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துபட்டி பகுதியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் பூமிநாதன் என்பவர், நெற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பள்ளத்துபட்டி சறுக்கு பாலம் என்ற இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் ஆடு திருடிக்க கொண்டு வந்துள்ளனர்.

இதனைப் பார்த்த காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன், விரட்டிச் சென்று அவர்களை பிடிக்க முயன்றுள்ளர். அப்போது அவர்கள் பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு ஒரு ஒரு மணி நேரம் கழித்து அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் இறந்த காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் நவல்பட்டு சேர்ந்த பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்து பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் 21-11-2021-ம் தேதி அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார். இச்சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்து பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

banner

Related Stories

Related Stories