தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியின் தரமற்ற பணி.. கனமழையால் தரைமட்டமானது பள்ளி கட்டிடம்.. தப்பித்த பள்ளி குழந்தைகள்!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வானதிராயபுரம் கிராமத்தில், 3 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கனமழையால் இடிந்து தரைமட்டமானது.

அ.தி.மு.க ஆட்சியின் தரமற்ற பணி.. கனமழையால் தரைமட்டமானது பள்ளி கட்டிடம்.. தப்பித்த பள்ளி குழந்தைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வானதிராயபுரம் கிராமத்தில் கனமழையால் 3 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்து வானதிராயபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அ.திமு.க ஆட்சியின்போது இந்தப் பள்ளியில் புதிய கட்டிடம் ஒன்றுக் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இந்தக் கட்டிடம் இடிந்துவிழுந்தது. பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வரததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories