தமிழ்நாடு

செயினை பறித்துவிட்டு காரை கடத்திச் சென்ற கொள்ளை கும்பல்.. சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலிஸ்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே செயின் மற்றும் காரை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செயினை பறித்துவிட்டு காரை கடத்திச் சென்ற கொள்ளை கும்பல்.. சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரை 4 பேர் கொண்ட கும்பல் மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு, அவருக்கு சொந்தமான மாருதி கார் ஒன்றையும் திருடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்த போலிஸாரிடம் தங்கராஜ் புகார் அளித்ததன்பேரில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கோவை மாவட்ட பொள்ளாச்சி நோக்கிய கார் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த காவலர்கள் காரை அடையாளம் கண்டு விரட்டி முடிக்க முற்பட்டனர். மேலும் போலிஸாரின் வாகன சோதனையிலும் கார் நிற்காமல் சென்றுள்ளது.

இதனையடுத்து காரை நிறுத்தாமல் சென்ற கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில் விடாமல் துரத்துச் சென்று போலிஸார் அவர்களை சின்னபாளையம் பகுதியில் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

போலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் ராபின், அருள்ராஜ், சேவக் மற்றும் மாரியப்பன் ஆகியோரை கைது செய்து, தங்கராஜிடமிருந்து பறித்துச் சென்ற நகை மற்றும் காரை போலிஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories