தமிழ்நாடு

விபத்தில் கையை இழந்த வாலிபரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர் கே.என்.நேரு!

விபத்தில் கையை இழந்த வாலிபரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தனியார் நிறுவனத்தில் வேலை பெற நடவடிக்கை மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு.

விபத்தில் கையை இழந்த வாலிபரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய  அமைச்சர் கே.என்.நேரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக வருவாய் வட்டம் வாரியாக சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, கிராமப்புறங்களில் உள்ள மக்களின் குறைகளை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஓரு மாதத்தில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து மேச்சேரி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு திட்டபணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது என அறிவுறுத்தினார்.

விபத்தில் கையை இழந்த வாலிபரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய  அமைச்சர் கே.என்.நேரு!

அப்போது அங்கு விபத்தில் ஒரு கையை இழந்த வினோத்குமார் என்ற இளைஞர் தனக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உடனடியாக வேலைக்கு ஏற்பாடு செய்திட நடவடிக்கை மேற்கொண்டார்.

தொடர்ந்து மேட்டூர் வருவாய் வட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பளார் டி.எம்.செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories