தமிழ்நாடு

ஒரே ஆண்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 பைக்குகள் அபேஸ்; பலே கும்பல் சிக்கியது எப்படி? - ஓசூரில் பரபரப்பு!

ஓசூர் அருகே 25 லட்சம் மதிப்பிலான 41 இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது.

ஒரே ஆண்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 பைக்குகள் அபேஸ்; பலே கும்பல் சிக்கியது எப்படி? - ஓசூரில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வருடமாக தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது.

இந்த தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின் பேரில் சூளகிரி காவல் ஆய்வாளர் மனேகரன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சூளகிரி பகுதியில் போலிஸார் வாகன தணிக்கையின் போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பரசேர்ந்த தட்சணமூர்த்தி, வாணியம்பாடியை சேர்ந்த அரசன், சந்தோஷ், சதீஷ் மற்றும் வேலூரை சேர்ந்த திருவெங்கடம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 41 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தது அவர்களை கைது செய்த சூளகிரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை மேற்க்கொண்டுவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories