தமிழ்நாடு

”வடிகாலில் கரப்ஷன்; பாயும் விசாரணை கமிஷன்: உப்பை தின்னவன் தண்ணீர் குடிச்சுதான் ஆகணும்” - சேகர்பாபு சாடல்

சபரிமலையில் தமிழக அரசின் சார்பில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மையம் அமைக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

”வடிகாலில் கரப்ஷன்; பாயும் விசாரணை கமிஷன்: உப்பை தின்னவன் தண்ணீர் குடிச்சுதான் ஆகணும்” - சேகர்பாபு சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பது எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காக அல்ல. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் சிம்ஸ் மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது. அந்த நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்த சேவையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 12 பேர் மருத்துவ குழுவினர் பணியில் இருப்பார்கள்.

இதனையடுத்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது,

சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி மையம் துவக்க இருக்கிறது. கேரளா அரசுடன் பேசியுள்ளோம். ஓரிரு நாளில் முதல்வர் அறிவிப்பார். சபரிமலை செல்வோர் கண்டிப்பாக 2 தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு சார்பில் சோதனை மையம் அமைக்கப்படும்.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டாயாமக ஏற்று நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கல்லூரிகளில் வகுப்புகள் விரைவில் செயல்படும். இந்து ஆன்மீக வகுப்புகள் துவங்குவது தொடர்பாக உயர்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கடிதம் வந்தவுடன் வகுப்புகள் துவக்கப்படும்.

கடந்த ஆட்சியில் அறங்காவலர் நியமனத்தை முறையாக செயல்படுத்தவில்லை. அதை சரி செய்து முறையாக அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் 28 நாடுகளில் இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையை சிங்கப்பூர் ஆக்கி உள்ளோம் என தேர்தல் சமயத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

ஆனால் பருவமழைக்கு மாநகர் தத்தளித்தது. கடந்த காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதிகள் எங்கே ? இதற்கு பதில் இல்லை. ஆகையால் வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான். உப்பை தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories