தமிழ்நாடு

கடன் கொடுத்தா திருப்பி கேப்பியா? உன்னால ஆனத பாத்துக்க -சுய உதவிக்குழுவினரை அடித்து விரட்டிய பாஜக நிர்வாகி

சுய உதவிக் குழுவின் மூலம் பெற்ற கடனை கேட்க வந்த ஊழியரை அடித்து விரட்டிய பாஜக நிர்வாகியால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.

கடன் கொடுத்தா திருப்பி கேப்பியா? உன்னால ஆனத பாத்துக்க -சுய உதவிக்குழுவினரை அடித்து விரட்டிய பாஜக நிர்வாகி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ கீரனூர் காலனி பகுதியில் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் பிரமுகரின் மனைவி தனியார் மகளிர் சுய உதவிக் குழுவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் சுமார் மூன்று மாதகாலமாக ஏமாற்றி வந்துள்ளார்.

அந்தக் கடனை கேட்கச் சென்ற தனியார் சுய உதவி குழுவில் வேலை செய்யும் ஊழியரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மருது என்பவர் ’என் மனைவியிடம் கடனைத் திரும்பத் தருமாறு கேட்பியா டா’ என்று கூறி கடனை வசூலிக்க வந்த சுய உதவி குழுவின் ஊழியரை விரட்டி விரட்டி அடித்து தாக்கியுள்ளார்.

அடித்துவிட்டு ’பணத்தை திரும்பத் தர முடியாது உன்னால் முடிந்தால் எங்க வேணாலும் போய் சொல், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று தகாத வார்த்தையால் திட்டி விரட்டி உள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

banner

Related Stories

Related Stories