தமிழ்நாடு

"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை" - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை" - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.

கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். வேறு மொழிகளில் படித்து தேர்வு மற்றும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமிக்கப்படுவார்கள்.

banner

Related Stories

Related Stories