தமிழ்நாடு

“CPI பிரமுகரை வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது - போலிஸார் தீவிர விசாரணை” : பதைபதைக்க வைத்த CCTV காட்சி!

நீடாமங்கலத்தில் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

“CPI பிரமுகரை வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது - போலிஸார் தீவிர விசாரணை” : பதைபதைக்க வைத்த CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கடைவீதி பகுதிக்குச் சென்றபோது, 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியானது.

இதுகுறித்து நீடாமங்கலம் போலிஸார் இந்த வீடியோவை கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர். இதில், முக்கிய குற்றவாளி பூவனூர் ராஜ்குமார், பூவனூர் ராஜ்குமார், மனோஜ், பாடகச்சேரி மாதவன், அறையூர் சேனாதிபதி, எழிலரசன் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். மேலும் நடேச தமிழார்வன் வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories