தமிழ்நாடு

“அண்ணன் தம்பி இடையே நடந்த தகராறு.. தடுக்க சென்ற தலைமை காவலருக்கு அரிவாளால்வெட்டு” : போலிஸார் விசாரணை!

விருதுநகர் அருகே சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபரை காவல்துறை தேடி வருகின்றனர்.

“அண்ணன் தம்பி இடையே நடந்த தகராறு.. தடுக்க சென்ற தலைமை காவலருக்கு அரிவாளால்வெட்டு” : போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் அருகே உள்ள மன்னார் கோட்டையை ரவிக்குமார் மற்றும் அவரது சகோதரர் பால்பாண்டி ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு பின்னர் கைகலப்பாக மாற துவங்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு சென்ற வசக்காரப்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் முருகன் தகராறை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவிக்குமார் அவரது சகோதரர் பால்பாண்டி அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். அப்போது அதனை தடுக்க முயன்ற தலைமை காவலர் முருகனின் கையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டதில் கையில் படுகாயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமை காவலர் கணேசனுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் விசாரணை நடத்தியுள்ள நிலையில், காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவிக்குமாரை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories