தமிழ்நாடு

“என்ன உதவின்னாலும் என்னை கூப்பிடுங்க” : இருளர், நரிக்குறவர் மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்ட ஆட்சியர்!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் வசித்து வந்த பூர்வகுடி இருளர் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என்ன உதவின்னாலும் என்னை கூப்பிடுங்க” : இருளர், நரிக்குறவர் மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்ட ஆட்சியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இருளர் இன மக்கள் வசிக்கும் மயிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே பட்டா வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து முதற்கட்டமாக அப்பகுதியைச் சேர்ந்த 67 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பட்டா வழங்குவதோடு அவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு போன்றவற்றையும் வழங்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அங்கிருந்தவர்களிடம் தனது தொலைபேசி எண்ணையும் வழங்கி உதவியோ அல்லது வேறு ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். ஆட்சியரின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories