தமிழ்நாடு

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்... விரைந்து மீட்ட சென்னை போலிஸ் : குவியும் பாராட்டு!

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணை படகு மூலம் பத்திரமாக சென்னை போலிஸார் மீட்டனர்.

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்... விரைந்து மீட்ட சென்னை போலிஸ் : குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் வெள்ளத்தில் சிக்கிய மக்களை போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள சொக்கலிங்கம் நகரில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனை அறிந்த வேளச்சேரி போலிஸார் உடனே அப்பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஜெயந்தி என்ற கர்ப்பிணிப் பெண்ணை போலிஸார் படகு மூலம் பத்திரமாக மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். போலிஸாரின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories