தமிழ்நாடு

மழைநீரில் இறங்கி நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)

மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் சூழ்ந்து பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வழங்கினார்.

மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை மானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கடும் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களை அத்தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கினார்.

மேலும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுத்திய நிலையில், மாநகராட்சி ஊழியர்களுடன் இனைந்து தடுப்பு பணியை மேற்கொண்டார். மேலும் இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “#NorthEastMonsoon மழைநீர் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் #ChepaukTriplicane 114அ வட்டம் லாக்நகர் கிளிமரம் பகுதி மக்களுக்கு வீடுவீடாக சென்று மதிய உணவு வழங்கினோம்.மழைநீரை வடியவைக்கும் பணி நடப்பதையும்,ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் அதுவரை தங்க கேட்டுக்கொண்டோம்.

#ChepaukTriplicane தொகுதி 114அ வட்டம் லாக் நகர் கிளிமரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை கால்வாயில் வடியவைக்கும் பணிகளை ஆய்வு செய்தோம். நீர் மெதுவாக வடிவதால் எந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி நீர்நிலைகளில் விடும் பணியை கழகத்தினர்-மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
மழைநீரில் இறங்கி  நேரில் ஆய்வு.. முதல்வரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்! (album)
banner

Related Stories

Related Stories