தமிழ்நாடு

இடைத்தேர்தலில் பலத்த அடிவாங்கிய பா.ஜ.க : பெட்ரோல், டீசல் விலை குறைத்ததன் பின்னணி இதுவா ?

ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் வரை குறைத்தது !

இடைத்தேர்தலில் பலத்த அடிவாங்கிய பா.ஜ.க : பெட்ரோல், டீசல் விலை குறைத்ததன் பின்னணி இதுவா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக தமிழ்நாடு கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.

2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது தி.மு.க அரசு.

ஆனால் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது. 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனிடையே 13 மாநில இடைத்தேர்தல்களில் பா.ஜ.க கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதன்விளைவாக எதிர்ப்புகளுக்கு பணிந்த ஒன்றிய அரசு எரிபொருட்கள் மீதான கலால் வரியை தற்போது குறைத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories