தமிழ்நாடு

நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உடைத்த நபரால் பரபரப்பு.. ரசிகர்கள் கடும் கண்டனம் - வீடியோ !

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப்ஃ என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு நாள் படப்பிடிப்புக்காக நேற்று நள்ளிரவு விமானம் மூலம் பெங்களூர் சென்ற விஜய்சேதுபதியை விமான நிலையத்தில் அங்கிருந்த சிலர் கேலி செய்துள்ளனர். இதனால் அந்த நபர்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து விமான நிலைய போலிஸார் இருவரையும் சமாதானம் செய்து வைத்து விஜய் சேதுபதியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் திடீரென ஓடிவந்து விஜய் சேதுபதியின் முதுகில் காலால் எட்டி உதைத்தார்.

இந்த காட்சியை யாரோ ஒருவர் செல்போனில் பதிவுசெய்துள்ளார். அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலிஸார் பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் சேதுபதி ரசிகர்கள் பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.


banner

Related Stories

Related Stories