தமிழ்நாடு

கோயம்பேடு,வேளச்சேரி மேம்பாலங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

வேளச்சேரி, கோயம்பேட்ய் மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கோயம்பேடு,வேளச்சேரி மேம்பாலங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சென்னையில் வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் சென்று மேம்பாலத்தை பார்வையிட்டார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாக நடைபெற்று வந்த மேம்பாலப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

சென்னையில் இந்த இரண்டு மேம்பாலங்களும் முக்கியமானவை என்பதால், வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும், கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் சுமார் 40 சதவிகிதம் வரையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories