தமிழ்நாடு

கன மழை எதிரொலி.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு!

கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன மழை எதிரொலி.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி நாளை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.

இதையொட்டி, "பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்" என நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம், அனுபவம் பகிர்தல் போன்ற வற்றை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் சுழற்சி முறையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்," இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories