தமிழ்நாடு

பெற்றோர்களே உஷார்.. நீச்சல் குளம் அருகே விளையாடிய 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி: சென்னையில் நடந்த சோகம்!

விளையாடும் போது நீச்சல் குளத்தில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே உஷார்.. நீச்சல் குளம் அருகே விளையாடிய 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி: சென்னையில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார். இவருக்கு 5 வயதாகும் ஹித்தேஜ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், மகன் ஹித்தேஜ் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த நீச்சல் குளம் அருகே ஹித்தேஜ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென தவறி நீச்சல் குளத்தில் சிறுவன் விழுந்துள்ளார். இதைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் உடனே சிறுவனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும் போது நீச்சல் குளத்தில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories