தமிழ்நாடு

பால் பாக்கெட்டில் விளம்பரம்; ஸ்வீட்ஸ் விற்பனை அமோகம் - ஆவின் முயற்சியால் மக்கள் மகிழ்ச்சி!

ஆவின் இனிப்பு விற்பனையை அதிகரித்து மக்களை கவரும் வகையில் புதிய வகை முயற்சிகளை கையில் எடுத்துள்ளது ஆவின் நிர்வாகம்.

பால் பாக்கெட்டில் விளம்பரம்; ஸ்வீட்ஸ் விற்பனை அமோகம் - ஆவின் முயற்சியால் மக்கள் மகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீப ஒளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகளின் விற்பனையை அதிகரிக்க புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்து விற்பனையை அதிகரிக்கும் வகையில், முதன்முறையாக ஆவின் பால் பாக்கெட்டுகளிலேயே ஆவின் இனிப்புகள் குறித்த விளம்பரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாகு, ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்களாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் பாக்கெட்டில் விளம்பரம்; ஸ்வீட்ஸ் விற்பனை அமோகம் - ஆவின் முயற்சியால் மக்கள் மகிழ்ச்சி!

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தீப ஒளிக்காக சிறப்பு இனிப்பு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீப ஒளிக்கு காஜுகத்லி, காஜு பிஸ்தா ரோல், தட்டி மில்க் கேக், மோத்தி பாக், காபி பிளேவர்டு மில்க் பர்பி உள்ளிட்ட புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை துவங்கப்பட்டு அமோகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆவின் வருமானத்தை உயர்த்தும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீப ஒளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் போதும், அரசு துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்கும் போதும் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

பால் பாக்கெட்டில் விளம்பரம்; ஸ்வீட்ஸ் விற்பனை அமோகம் - ஆவின் முயற்சியால் மக்கள் மகிழ்ச்சி!

அந்த வகையில், கடந்த 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை ரூ. 22 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆவின் இனிப்புகள் ரூ19.98 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சராசரியாக 30 கோடிக்கும் மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆவின் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல வண்ண கவர்களில், பல அளவுகளில் விற்பனையாகி வரும் ஆவின் பால் பாக்கெட்டுகளிலேயே ஆவின் தயாரிப்பு இனிப்புகள் குறித்த விளம்பரம் அச்சிடப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் ஆவின் நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories