தமிழ்நாடு

₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய சொத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு கஞ்சம்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பிலான 70 சென்ட் நிலம் உள்ளது.

இவரது நிலத்தின் அருகில் பாஜகவின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சின்னசாமி என்பவருக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்துள்ளது.

₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

இந்நிலையில் அரசியல் கட்சியின் அதிகார போக்கினை வைத்து கொண்டு மூதாட்டி நஞ்சம்மாளின் 70 சென்ட் நிலத்தை பாஜக பிரமுகர் சின்னசாமி அபகரித்ததோடு, மூதாட்டியை அடியாட்களை வைத்து காலி செய்ய வைத்திருக்கிறார்.

இதனையடுத்து, தன்னை ஏமாற்றி தன்னுடைய நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் ஆணையரிடமும் பல்வேறு அதிகாரிகளிடமும் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நஞ்சம்மாள் இன்று மாவட்ட ஆட்சியர் வினித்திடம் தன்னுடைய நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார்.

மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

banner

Related Stories

Related Stories