தமிழ்நாடு

சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து லீஸ்-க்கு விட்டு லட்சக்கணக்கில் சுருட்டல்: பாஜக நிர்வாகி அதிரடி கைது!

55 வயது பெண்மணிக்கு சொந்தமான வீட்டை பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து லீஸ்-க்கு விட்டு லட்சக்கணக்கில் சுருட்டல்: பாஜக நிர்வாகி அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த 55 வயதான லீனா பெர்ணாடஸ் என்பவருக்கு சொந்தமாக சென்னை திருவான்மியூர் கண்ணப்பன் நகர் விரிவு பகுதியில் வீடு உள்ளது.

இவரது கணவரின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தார். இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் சிவ அரவிந்த்க்கு 2 லட்சம் முன்பணம் 40,000 ரூபாய் மாத வாடகை என வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

பின்னர் நான்கு மாதம் மட்டுமே வாடகை கொடுத்ததாகவும் தொடர்ந்து 11 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என்பதால் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். செல்போன் அழைப்பை எடுக்காததால் திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வேறு ஒரு நபர் குடியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

ஆகையால் வீட்டில் இருப்பவரிடம் விசாரித்தபோது சிவ அரவிந்த் என்பவர் தங்களிடம் ரூபாய் 17 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிவ அரவிந்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லீனா பெர்ணாடஸ் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் நிலைய போலிஸார் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் வாடகைக்கு விட்ட வீட்டை உரிமையாளர்க்கு தெரியாமல் பாஜகவை சேர்ந்த சிவ அரவிந்த் என்பவர் வேறு ஒருவர்க்கு குத்தகைக்கு விட்டதும், வீட்டை அபகரிக்க நினைத்ததும், உரிமையாளர்க்கு கொலை மிரட்டல் விட்டதும் தெரிய வந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் சிவ அரவிந்த் மீது 420, 294(b), 506(!) Ipc பிரிவீன் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories