தமிழ்நாடு

“12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” : வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் சொல்வது என்ன?

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” : வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குமரிக் கடல் பகுதியை ஒட்டி 1.5 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக : வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

22.10.2021: மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

23.10.2021: வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24.10.2021: அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

25.10.2021, 26.10.2021 : மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

அமராவதி அணை (திருப்பூர்) 10, செஞ்சி (விழுப்புரம்), அரவக்குறிச்சி (கரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 7, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கன்னிமார் (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 6, வீரபாண்டி (தேனி), பரமத்திவேலூர் (நாமக்கல்), அரியலூர் (அரியலூர்), கே.பரமத்தி (கரூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 5, கோவில்பட்டி (தூத்துக்குடி), சேலம் (சேலம்), உத்தமபாளையம் (தேனி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 4, திருச்செங்கோடு (நாமக்கல்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பெரியார் (தேனி), பவானி (ஈரோடு), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கொடவாசல் (திருவாரூர்) கோவில்பட்டி (தூத்துக்குடி), ஈரோடு (ஈரோடு) தலா 3,

குறிப்பு : வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

banner

Related Stories

Related Stories