தமிழ்நாடு

"வரலாற்றை மாற்றிய முதல்வர்": ஒரே உத்தரவு - பெயர் மாறிய வண்ணான்குளம்!

வண்ணான்குளம் பகுதி வண்ணக்குளம் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

"வரலாற்றை மாற்றிய முதல்வர்": ஒரே உத்தரவு - பெயர் மாறிய வண்ணான்குளம்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள 'வண்ணான்குளம்' என்ற பகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி 'வண்ணக்குளம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என்ற புதிய பெயர் வைக்க சிறப்பு அதிகாரி (நிலைக்குழு வரிவிதிப்பு (ம) நிதி) மூலமாக மன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.

எனவே, முதல்வரின் அறிவுறுத்தலின்படி அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192-ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றி புதிய பெயர் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories