தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லெட்சுமியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுப்பிரமணியன். விவசாயியான இவரது மனைவி சாந்தி. மனைவி சாந்தி அரசு பள்ளியில் பணிபுரியும் ஓர் முதுநிலை ஆசிரியர். ரவி சுப்பிரமணியம் - சாந்தி தம்பதியினருக்கு சாருகலா என்ற மகளும் அழகு சந்துரு என்ற மகனும் உள்ளனர். அழகு சந்துரு. சாருகலா தற்பொழுது முதுநிலை (M.E) பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி பகுதியில் சுயேட்சையாக பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் சாருகலா.
சாருகலாவின் திறமையை கண்டு மக்கள் மாபெரும் வெற்றி பெற வைத்துள்ளனர். 3336 வாக்குகளுடன் 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று வெற்றி பெற்ற வர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதேபோல் வெங்கடாம்பட்டி கிராம் ஊராட்சியில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற சாருகலா இன்று பதவி ஏற்றார். அவருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.