தமிழ்நாடு

“கலைஞரை நெஞ்சில் ஏந்தியவர்களை ஒருபோதும் வீழ்த்தமுடியாது” : 22 வயது ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா பேட்டி!

தென்காசி மாவட்டத்தில் 22 வயது பொறியியல் பட்டதாரியான இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“கலைஞரை நெஞ்சில் ஏந்தியவர்களை ஒருபோதும் வீழ்த்தமுடியாது” : 22 வயது ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா பேட்டி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 22 வயதான பொறியியல் கல்லூரி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த சாருகலாவும் (22) போட்டியிட்டார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்படி 21 வயதான சாருகலா 3,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற சாருகலா கோவையில் உள்ள கல்லூரியில் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் செங்கல் சூளை நடத்தி வருகிறார். தாய் சாந்தி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.

“கலைஞரை நெஞ்சில் ஏந்தியவர்களை ஒருபோதும் வீழ்த்தமுடியாது” : 22 வயது ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா பேட்டி!
Admin

தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குத் தேர்வான சாருகலாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தன்னை வெற்றி பெறவைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறியுள்ள சாருலதா, மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த சாருகலா, “ எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதியான தண்ணீர் கிடைப்பத்தில் சிரமம் உள்ளது. நான் பொறுப்பேற்ற இன்னும் 6 மாதத்தில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து அடிப்படை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களுடைய ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த சாருகலா, ''என்னுடைய இன்ஸ்பிரேஷன் கலைஞர் ஐயாதான்.. அவர் வழியில் நானும் நடந்து சமத்துவமாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories