தமிழ்நாடு

நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபரீதம்... அண்ணன் கண்முன்னே தம்பி நீரில் மூழ்கி பலி!

நீச்சல் பயிற்சியின் போது அண்ணன் கண்முன்னே தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபரீதம்... அண்ணன் கண்முன்னே தம்பி நீரில் மூழ்கி பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு அரவிந்த் மற்றும் ஜீவா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அரவிந்த், தம்பி ஜீவா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களும் மாதேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது தம்பி ஜீவாவிற்கு நீச்சல் தெரியாததால், அண்ணன் அரவிந்த் அவருக்கு நீச்சல் எப்படி அடிப்பது என்பது குறித்து கற்றுக்கொடுத்துள்ளார். இதில் திடீரென ஜீவா நீரில் மூழ்கியுள்ளார். அவரை அரவிந்த் பிடிக்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

இதனால், பதட்டமடைந்த சிறுவர்கள் உடனே பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்துக் காவல், தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவன் ஜீவாவை மீட்க முயற்சி செய்தனர்.

ஆனால் சிறுவனைச் சடலமாகத்தான் தீயணைப்பு வீரரால் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories