தமிழ்நாடு

'என் பேரில் சொத்து எழுதுங்க': வளர்ப்பு மகன் தகராறு: விபரீத முடிவெடுத்த பெற்றோர்!

சொத்துக்களை எழுதிவைக்கக் கோரி வளர்ப்பு மகன் தகராறு செய்ததால் பெற்றோர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

'என் பேரில் சொத்து எழுதுங்க': வளர்ப்பு மகன் தகராறு: விபரீத முடிவெடுத்த பெற்றோர்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்குக் குழந்தை இல்லாததால் அஜித்குமார் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், அஜித்குமார் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகியுள்ளார். மேலும் சொத்துக்களைத் தனது பெயருக்கு எழுதி வைக்குமா கூறிவந்துள்ளார்.

இதனால் வளர்ப்பு மகனுக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித்குமார் மீண்டும் சொத்துக்களை எழுதிக் கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த ராமசாமியும், அவரது மனைவி மாரியம்மாளும் தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து தற்கொலைக்கு முன்பு தம்பதி எழுதிவைத்த கடிதத்தை போலிஸார் மீட்டனர். இதில் எங்கள் தற்கொலைக்கு மகன் தான் காரணம் என்றும், சொத்துக்களை அவனுக்கு எழுதி வைக்கக் கூடாது என உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories