தமிழ்நாடு

ரம்மி ஆடுவதற்காக நூதன மோசடியில் ஈடுபட்ட லண்டன் ரிட்டர்ன் : ஹைடெக் பட்டதாரி திருடன் சிக்கியது எப்படி?

மோசடி செய்து கிடைத்த பணத்தில் 11 லட்சத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பட்டதாரி இழந்தது விசாரணையில் அம்பலம்

ரம்மி ஆடுவதற்காக நூதன மோசடியில் ஈடுபட்ட லண்டன் ரிட்டர்ன் : ஹைடெக் பட்டதாரி திருடன் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி செய்து லட்ச கணக்கில் சுருட்டிய லண்டன் பல்கலைக்கழக மாணவர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். மருத்துவரான இவர் கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். குரோம்பேட்டையில் இருந்து கொளத்தூர் வந்து செல்வதற்கு சிரமமாக இருந்ததால் கொளத்தூர் அருகே வாடகைக்கு வீடு பார்த்து குடியேருவதற்காக ஆன்லைன் மூலமாக வீடு தேடியுள்ளார்.

மருத்துவர் கார்த்திக் வீடு தேடுவதை அறிந்து செல்போனில் தொடர்பு கொண்ட நபர் அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள NEWRY TOWER அடுக்குமாடி குடியிருப்பில் வீடு இருப்பதாக தெரிவித்து வாட்சப் மூலமாக வீட்டின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் வீட்டின் உரிமையாளர் என்றும் தான் வெளியில் இருப்பதாக கூறி முன் தொகைக் கேட்டுள்ளார்.

வாடகை ஒப்பந்தப்பத்திரம் போட்டு வாட்சப்பில் அனுப்பி முன் தொகையை அனுப்பக் கூறியுள்ளார். அதனை நம்பிய மருத்துவர் கார்த்திக் வங்கி கணக்கு மூலமாக 5 தவணையாக 57 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் குடியேறுவதற்காக முயற்சி செய்த பொழுது செல்போன் எண் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரித்த பொழுதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில் அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வங்கி கணக்கை வைத்து விசாரணை செய்ததில் கடலூர் மாவட்டதை சேர்ந்த புஷ்பராஜ்/34 என்பதும் தெரியவந்தது.

சொந்த ஊரில் அவர் இல்லாத நிலையில் வங்கியில் கொடுத்த செல்போன் எண் மற்றும் கார்த்திக் கொடுத்த செல்போன் எண்ணின் டவரை வைத்து வடபழனியில் இருப்பது தெரியவந்தது.

ரம்மி ஆடுவதற்காக நூதன மோசடியில் ஈடுபட்ட லண்டன் ரிட்டர்ன் : ஹைடெக் பட்டதாரி திருடன் சிக்கியது எப்படி?

மேலும் இரண்டு செல்போன் எண்ணிற்கு வந்த செல்போன் அழைப்புகளை பரிசோதனை செய்ததில் 10க்கும் மேற்பட்டவர்கள் புஷ்பராஜால் ஏமாற்றப்பட்டவர்கள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தொடர் விசாரணைக்கு பிறகு அவனை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் இது போன்று பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.

ஓ.எல்.எக்எஸ் மற்றும் NO BROKER.COM போன்ற ஆன்லைன் வெப்சைட்களில் வீடு வாடகைக்கு தேவைப்படுபவர்களின் எண்களை சேகரித்தும், மற்ற இணைய தளங்களில் வீடு வாடகைக்கு என கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களை எடுத்து அதனை NO BROKER.COM என்ற இணையதளம் மூலமாக வீடு வாடகைக்கு உள்ளதாக கூறி பதிவேற்றி இவரது செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்பவர்களுக்கு போலியாக வாடகை ஒப்பந்தப்பத்திரம் தயார் செய்து கொடுத்து வங்கி மூலமாக பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொரட்டூரில் வீடு வாடகைக்கு தேவை என்று தேடியப்பொழுது இவனிடம் சிக்கி 8.5 இலட்ச ரூபாயை இழந்துள்ளார். இதே போன்ற சென்னையில் பல்வேறு நபர்களிடம் மோசடி செய்து இலட்ச கணக்கில் சம்பாதித்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

லண்டனில் MS கம்யூட்டர் நெட்வொர்க்கிங் முடித்து விட்டு சென்னையில் சில காலம் இதே போன்ற இணையதளத்தில் பணிப்புரிந்து வந்ததாகவும், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் போதிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால் , ஏற்கனவே பணி செய்த அந்த அனுபவத்தை வைத்து இது போன்ற மோசடியில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மட்டும் 11 இலட்சத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இருந்து 6 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். வாடகைக்கு இணையதளம் மூலம் வீடு தேடுபவர்கள் நேரிடியாக சென்று வீட்டை பரிசோதனை செய்து பணத்தை நேரடியாக செலுத்துமாறும், வீட்டின் உரிமையாளர்களும் உஷாராக இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

banner

Related Stories

Related Stories