தமிழ்நாடு

சிக்கன் சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்க்ஸ் குடித்த தாய் மகள் உயிரிழப்பு - கோவில்பட்டியில் சோகம்!

சிக்கன் கிரேவி வைத்து உணவு சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கன் சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்க்ஸ் குடித்த தாய் மகள் உயிரிழப்பு - கோவில்பட்டியில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம் (34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7).

இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது லேசான வயிறு எரிச்சல் ஏற்படவே அருகில் இருந்த கடையில் 10 ரூபாய் விலையில் உள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர்.

சிக்கன் சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்க்ஸ் குடித்த தாய் மகள் உயிரிழப்பு - கோவில்பட்டியில் சோகம்!

இதையடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலிஸார் தாய் மகள் இருவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தாயும் மகளும் சாப்பிட்ட சிக்கன் கிரேவி உணவையும், குடித்த குளிர்பான பாட்டிலையும் வைத்து ஆய்வு போலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories